மேடை நடன கலைஞர்கள் தமிழக முதல்வருக்கு 11' அம்ச கோரிக்கை!
மேடை நடன கலைஞர்கள் தமிழக முதல்வருக்கு 11' அம்ச கோரிக்கை! திரை நட்சத்திரங்களின் 'ஸ்டார் நைட் ஷோ' தலைமையேற்க முதல்வருக்கு அழைப்பு! 'தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம்' பொதுக்குழு செயற்குழு 2024-ம் ஆண்டு பேரவை கூட்டம், சென்னை வடபழனி சிகரம் ஹாலில், தலைவர் பி.பிரேம்நாத் தலைமையில் நடைபெற்றது! இந்த பொதுக்குழுவில் சங்க உறுப்பினர்களும், நடிகர்களுமான ரோபோ சங்கர், பிரியங்கா ரோபோ சங்கர், முத்துக்காளை, கிங்காங், சாரபாம்பு சுப்புராஜ், பாவா லட்சுமணன், ஜூலி பாஸ்கர், சூதுகவ்வும் சிவக்குமார், சாய் கோபி, சந்திரபாபு ஈஸ்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பி.பிரேம்நாத், தமிழக முதல்வருக்கான கோரிக்கை மனுவை வாசித்தார். அதில்... மேடை நடன கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். ஒரு நடன கலைஞருக்கு மரணம் ஏற்பட்டால், தமிழக அரசு 5' லட்சம் நிதி வழங்க வேண்டும். வயது முதிர்ந்த நடன கலைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்க வேண்டும். நடன கலைஞர்கள் வெளியூர் சென்று வர 50 சதவீதம் கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்க வேண்டும். சென்னை நக...
Comments
Post a Comment