'கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்
'கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்
உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது இந்த முயற்சி... அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது.
சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்பு கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியை பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது, '' எனது தந்தையும், பழம்பெரும் நடிகருமான கமல்ஹாசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்திய அதே தற்காப்பு கலையைத் தான் பயிற்சி செய்து வருகிறேன்'' என தெரிவித்திருக்கிறார்.
Shruti Haasan Practices Martial Arts and MMA During "Coolie" Shoot
Recently, the actress shared a video on her social media, showcasing her martial arts skills. Interestingly, Shruti is practicing the same martial art form that her father, the legendary actor Kamal Haasan, performed in the iconic film "Thevar Magan."
Comments
Post a Comment