சிட்னி ஸ்ட்ரான்ஸ் தலை முடி மாற்றம், விக் பொருத்துதல் அழகு நிலையம் திறப்பு விழா.

 சிட்னி ஸ்ட்ரான்ஸ்   தலை முடி மாற்றம், விக் பொருத்துதல் அழகு நிலையம் திறப்பு விழா.


 சென்னை-, மே-24. வீகேர் தலையலங்காரம் மற்றும் முடி உதிர்தல், வழுக்கை தலைக்கான தீர்வு காணும் வீகேர் குழுமத்தின் தலைமுடி விக் பொருத்தும் மற்றொரு நிறுவனம் சிட்னி ஸ்ட்ரான்ஸ் ஆகும். 














இதன் துவக்கவிழாவில் 

வீகேர் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கரோலின் பிரபா ரெட்டி, தலைமை  செயல் அதிகாரி முகுந்தன் சத்யநாராயணன், மற்றும்  நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி  துவக்கி வைத்தனர்.


பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-


சிட்னி ஸ்ட்ரான்ஸின்  புதிய பிராண்ட் வெளியீட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

 சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் துவக்கப்பட்டுள்ள இதுவே முதல் கிளையாகும் .


மேலும்  மிக விரைவில் இந்தியா முழுவதும் பல கிளைகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.


இது உயர்தர முடி மாற்றுதல்கள், விக் பொருத்துதல் மூலம் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதில் முன்னிலை வகிக்கும் .


ஏற்கனவே முடி மாற்றுதல், தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற  வீகேர் நிறுவனம் அதன் அனுபவத்தை கொண்டு சிட்னி ஸ்ட்ரான்ஸ் விக் பொருத்துதல்  ஷோருமை  நிறுவுவதில் பெருமை கொள்கிறது.


சிட்னி ஸ்ட்ரான்ஸ் விக் பொருத்துதல்  மூலம் வாடிக்கையாளர்கள் தோற்றத்தை மட்டுமல்ல, வாழ்க்கை முறையை மேம்படுத்தும். 


இதனால் முகம்  பொலிவு பெறுவதுடன். சமூகத்தின் பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.


இயற்கைத் தோற்றத்தை அடைய புதிய தொழில் நுட்பத்தின் வாயிலாக துல்லியமான அளவீடுகளுடன் விக் பொருத்துதல் சேவையை வழங்குகிறது.


3டி பரிமாணத்தில் முக அமைப்புகளை கணினி மூலம் உள்வாங்கி ஒவ்வொருவரின் முகத்திற்கு ஏற்றவாறும், தனிநபர் விருப்பத்தின் பேரிலும், தலைமுடி விக்குகளை பொருத்தி பயனாளர்களை திருப்தி அடைய செய்வதிலும் அதிக கவனம் செலுத்துகிறது.


மேலும்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தலைமுடி விக்  தாயரிப்பில் சிட்னி ஸ்ட்ரான்ஸ்  அதிக கவனம் செலுத்துகிறது. நோயின் தாக்கத்தால் முகப் பொலிவை இழந்தவர்களை மீட்டுருவாக்கம் செய்வதில் பரிவோடு  சிட்னி ஸ்ட்ரான்ஸ் செயல்படுகிறது என்றார்.

Comments

Popular posts from this blog

மேடை நடன கலைஞர்கள் தமிழக முதல்வருக்கு 11' அம்ச கோரிக்கை!

Max URB_N Shuffles It Up with Spotify: India’s First Multi-City Rap Concert Series Takes Over the South

மறைமுகம் இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா தனுஜா இருவரும்