'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' படத்தின் முதல் பாடல் 'வைப் இருக்கு பேபி..' வெளியீடு.

'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' படத்தின் முதல் பாடல் 'வைப் இருக்கு பேபி..' வெளியீடு. 'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா - கார்த்திக் கட்டமனேனி - டி. ஜி. விஸ்வ பிரசாத் - கிருத்தி பிரசாத் - பீப்பிள் மீடியா ஃபேக்டரி - கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'மிராய் ' படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 'ஹனுமான்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான 'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா- 'சூப்பர் யோதா'வாக நடிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' பாடலுக்கான ப்ரோமோ வெளியாகி பரபரப்ப...