#Amaran Releasing worldwide today. Best wishes to the team for mega Blockbuster.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் தீரத்துடன் போராடி உயிரிழந்த தமிழ் இளைஞர் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை அமரன் எனும் திரைப்படமாக நாளை தீபாவளி தினத்தில் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். முகுந்தின் காதல் மனைவி இந்து ரெபெக்கா வர்க்கீஸாக சாய் பல்லவி நடித்துள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள அமரன் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், ஆர். மகேந்திரனும் இணைந்து தயாரித்துள்ளனர். அசோக் சக்ரா விருதைப் பெற்றுள்ள நான்கு தமிழர்களில் முகுந்த் வரதராஜனும் ஒருவர். மேஜர் முகுந்த் மறைந்தபோது அப்போது திமுகவின் பொருளாளராக இருந்த மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “தமிழகத்தின் வீரம் மீண்டும் ஒரு முறை இமயமலைச் சாரலில் தன் அழுத்தமான முத்திரையைப் பதிக்கும் விதத்தில், சென்னையைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்துத் துணிவுடன் போரிட்டபொழுது கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய உயிர்த்தியாகத்திற்கு வீரவணக்கம் செலுத்துகின்ற அதே நேரத...