Posts

Showing posts from September, 2024

Actor Jayaram presides as Chief Guest at ‘Bharat Yathra’ Curtain-Raiser Event!

Image
'பாரத் யாத்ரா' நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டார்! சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்துகிறது. நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் இந்த அசாத்திய முயற்சியின் பின்னணியில் உள்ள முழு குழுவையும் வாழ்த்தினார். மேலும், இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த பிரச்சாரம் அக்டோபர்6, 2024 அன்று கன்னியாகுமரியில் தொடங்கி டிசம்பர்3, 2024 அன்று புதுதில்லியில் நிறைவடையும். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் தலைமை தாங்க, அவருடன் கோகுலம் கோபாலன், பிரவீன், அன்வர...

Seeran Movie- Music and Trailer Launch!

Image
பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் வெளியிட்ட, சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் !! *பிரபல இயக்குனர் ராஜேஷ் எம் உதவியாளர் இயக்கும் சீரன் திரைப்படம்..* சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.   இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படப்புகழ் இயக்குநர் ராஜேஷ் எம், இவ்விழாவில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தியதோடு, படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர்.  இந்நிகழ்வினில்…  தயாரிப்பாளர், நட...

Sasikumar and Simran starrer new film’s shoot to go on floors from October!

Image
  மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புரொடக்சன் நம்பர் 5 சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம் நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது.  அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 5' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.  கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோ...

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !!

Image
  சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி !! சென்னையில் "ஜல்லிக்கட்டு" செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில், நடிகர் கார்த்தி பேச்சு !! கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி இன்று கலந்துகொண்டார். தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் இங்குக் கடை விரித்துள்ளனர். இந்த திருவிழாவில் கிராமத்து உணவுகள், சிறு தானிய உணவுகள், மாட்டு வண்டி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஒரு திருவிழாவில் காணக்கிடைக்கும் அனைத்தும் உள்ளது. இத்திருவிழா சனி, ஞாயிறு என அடுத்த இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது. இன்றைய விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது…   கோடை விடுமுறைக்கு ஊருக்கு போவது அவ்வளவு பிடிக்கும், ஊரை விட்டு வர மனசே வராது. அந்த மாதிரி கதை என்பதால் தான் மெய்யழகன்...

Cookd Takes a Culinary Adventure to Thalaivettiyaan Paalayam with Panchayat Secretary Sidharth, aka Abishek Kumar, for a Murungakkai Biryani – Check out the video!

Image
  தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி! தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது. யூட்யூபில் 2.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் சமையல் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் குக்ட் . இந்த யூட்யூப்பில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், சமையல் வகைகள், சமையல் தயாரிப்புகள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் ஏராளமான அம்சங்களை கலவையாக தயாரித்து வழங்கி வருகிறது. தலை வெட்டியான் பாளையம் - ப்ரைம் வீடியோவில் இடம்பெற்றுள்ள அசல் தமிழ் நகைச்சுவை இணைய தொடர். பார்வையாளர்களின் மனதை கவரும் இந்த இணைய தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை கண்டு ரசித்தவர்கள் ஆரோக்கியமானது ... ஆத்மார்த்தமானது... தென்றலாக தாலாட்டுகிறது...பெருங்களிப்பை வழங்குகிறது..என பாராட்டுகிறார்கள். இந்...

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்

Image
  ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம் தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். இதனை தொடர்ந்து  ரசிகர்கள், துருவ் விக்ரமுடன் இணைந்து, அவரது  பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். அத்துடன் செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதன்முதலாக இணைந்து நடித்த  'மகான்' திரைப்படம் தனிப்பட்ட காட்சியாக ( Private Show) திரையிடப்பட்டது. இதனை  ரசிகர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் உற்சாகமாக பார்வையிட்டார். பிறந்த நாளன்று துருவ் விக்ரம்  ரசிகர்களை சந்தித்து கொண்டாடியது... ரசிகர்களுக்கு பெரும்  மகிழ்ச்சியை அளித்தது.‌ இந்நிகழ்வை அகில இந்திய சீயான் விக்ரம் நற்பணி மன்ற தலைவரும், மேலாளருமான திரு. சூரிய நாராயணன் ஒருங்கிணைத்திருந்தார். இதனிடையே நடிகர் துருவ் விக்ரம் தற்போது முன்னணி நட்சத்திர இயக்குந...

Music Director Arun Raj and Bigg Boss Fame Archana Ravichandran Unveil Electrifying New Single Toxic Kadhal.

Image
  இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள உற்சாகமூட்டக்கூடிய  புதிய சுயாதீன  பாடல் ‘டாக்ஸிக் காதல்’. ஆத்மாவை வருடும் உணர்ச்சிகரமான இசை படைப்புகளால் பரவலாக அறியப்படும் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளர் அருண்ராஜ், ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனுடன் இணைந்து, சமீபத்தில்  அவர்களின் புதிய பாடலான ‘டாக்ஸிக் காதல்’-ஐ வெளியிட்டுள்ளனர். அதீத எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த பாடல், நவீன காதல் உறவுகளின் சிக்கல்களை உணர்ச்சிகரமான மெலோடிகள் மற்றும் தைரியமான பாடல்வரிகளின் கலவையால் விவரிக்கிறது. ‘டாக்ஸிக் காதல்’ என்ற இந்த பாடல், காதல் சில நேரங்களில் ஏற்படுத்தக்கூடிய இருண்ட, தீவிரமான மற்றும் மாறும் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துகிறது. தடம், எறும்பு, பிஸ்ஸா-3, பைரி போன்ற வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் இதயங்களை வென்ற அருண் ராஜ், இந்த பாடலுக்கு புதிதாகவும்  இதற்கு முன் கண்டிராத இசை வடிவத்தையும் கொண்டு வந்துள்ளார். பாரம்பரிய இசை கூறுகளை நவீன இசைத்துடிப்புடன் கலந்து இசையமைப்பது என்பது அவருக்கு கை வந்த கலை...

'சாரா கலைக்கூடம்' நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'ஆகக்கடவன'.

Image
  'சாரா கலைக்கூடம்'  நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'ஆகக்கடவன'. புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவர் நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் வந்த சில குறும்படங்களிலும் அட்டக்கத்தி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் நடித்துள்ளனர்.  இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவரான தர்மா, திரைப்படக் கல்லூரியில் இவர் இயக்கிய ஒரு குறும்படம் 3 மாநில விருதுகளை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு லியோ வெ ராஜா, இசை சாந்தன் அன்பழகன், படத்தொகுப்பை சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இணைந்து  செய்து இருக்கிறார்கள்.. இப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன, பாடல் வரிகளை விக்கி எழுத,வல்லவன் மற்றும் விக்கி  பாடியுள்ளனர், இப்படத்தைப் பற்றி இயக்குனர் தர்...

ABC Talkies Welcomes Sakshi Agarwal as New Advisory Board Member and Regional Brand Ambassador

Image
  ஏபிசி டாக்கீஸ் சாக்ஷி அகர்வாலை புதிய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், நிறுவனத்தின் பிராந்திய விளம்பரத் தூதராகவும் நியமித்துள்ளது   சுயாதீன திரைப்பட இயக்குனர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையாக அணுகக் கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசி டாக்கீஸ், முன்னணி நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வாலை தனது ஆலோசனைக் குழுவில் இணைத்துக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு மேலாக, சாக்ஷி அகர்வால் பிராந்திய விளம்பரத் தூதராகவும் செயல்படுவார், இளம் திறமைகளை ஆதரிக்க ஏபிசி டாக்கீஸ் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல் படுவதை மேலும் வலுப்படுத்துவார்.   தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகையும் மாடலுமான சாக்ஷி அகர்வால், பல்வேறு திறமைகளைக் கொண்டவர். அவர் ஆலோசனைக் குழுவில் இணைந்தது, சினிமாவில் படைப்பாற்றல் மற்றும் புதுமையை ஊக்குவிக்க ஏபிசி டாக்கீஸ் முன்னணி தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்படும் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.   இரட்டை பதவியில், சாக்ஷி அகர்வால் ஏபிசி டாக்கீஸ் நிறுவனத்திற்குத் தூரநோக்கு வழிகாட்டியாக இருந்து அதன் திட்டங்கள் மற்றும் முயற்சிகளை வடிவமைக்க உதவுவார். க...