Posts

Showing posts from July, 2024

Shivanna's 131st Movie Ready to Set Sail… Team Meets the Hat-trick Star

Image
 சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது… ஹாட்ரிக் ஸ்டாரை சந்தித்தது படக்குழு சிவண்ணாவின் 131வது படம், ரசிகர்கள் உற்சாகம் கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின்  131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி விட்டது. சிவன்னாவின் 131வது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது. சிவண்ணாவின்  131வது படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப்பிடிப்பை பிரமாண்டமாக துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று  சிவண்ணாவைச் சந்தித்தது. இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் எடிட்டர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது நாகவாரா இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் உற்சா...

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!

Image
 பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !! லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன்     மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.  மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லுதீர் பைரெட்டி இயக்குகிறார். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் திரைவாழ்வில்  மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும்  இப்படத்தை சிவன் ராமகிருஷ்ணா வழங்குகிறார். 400 ஆண்டுகள் பழமையான கோவிலை மையமாக கொண்டு  ஒரு அமானுஷ்ய த்ரில்லராக உருவாகும் இந்தத் திரைப்படத்தில்...

'Pechi' Movie Press Meet | Gaythrie Shankar, Bala Saravanan, Dev, Ramachandran

Image
’பேச்சி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ’வெரூஸ் புரொடக்‌ஷன்’ (Verus Productions) நிறுவனம் தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க் படமாக ‘பேச்சி’ அமையும்! - பிரபலங்கள் பாராட்டு ‘மைனா’, ‘பீட்சா’ படங்கள் வரிசையில் ‘பேச்சி’ இடம் பிடிக்கும்! - படக்குழு நம்பிக்கை ‘பேச்சி’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக புதுமையான திரை அனுபவத்தை கொடுக்கும் - இயக்குநர் ராமச்சந்திரன்  அனைத்துவிதமான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் - ‘பேச்சி’ பட விழாவில் நடிகர் பாலசரவணன் பேச்சு. வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். பால சரவணன், காயத்ரி...

'Pitha' Movie Press Meet

Image
 "பிதா" படத்தை பாராட்டும் பிரபலங்கள்! 'பிதா' படத்தின் போஸ்டரை இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்! ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட 'பிதா' படம் திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் அனைவருமே படத்தையும், பட குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்கள்! தயாரிப்பாளர்கள் ஜி.சிவராஜ், அன்புச் செழியன், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ், இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, கேபிள் சங்கர், எஸ்.சுகன், நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், ஆதேஷ் பாலா, சாம்ஸ், சம்பத்ராம், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரிஸ் ராஜா, மாஸ்டர் தர்ஷித், நடிகை  ரிஹானா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் 'பிதா'! எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை,  தரமான  சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும்  'ஆக...

'Vascodagama' Movie Audio Launch | Nakkhul | Devayani | KS Ravikumar

Image
 நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா : நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு! சினிமாவை அழித்து விடாதீர்கள் : நடிகர் நகுல் பேச்சு! 44 நடிகர்களை வைத்து 41 நாட்களில் எடுக்கப்பட்டுள்ள படம் வாஸ்கோடகாமா : இயக்குநர் ஆர்ஜிகே பேச்சு! 5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல்  நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள்.  விழாவில் நடிகை தேவயானி பேசும் போது, "முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன். சுறுசுறுப்பாக, அழகாக, நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைந்திருக்கின்றன. என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அவனை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. எனக்கு...